UAE Tamil Web

துபாய் வங்கியின் ஆன்லைன் சேவைகளை அடுத்த வாரத்தில் பயன்படுத்த முடியாது – வங்கி வெளியிட்ட அறிவிப்பு..!

Mobile Banking

துபாயின் மிகப்பெரிய வங்கியான எமிரேட்ஸ் NBD இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் அடுத்த வாரம் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்தமுடியாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, வங்கியின் வாடிக்கையாளர்கள் மே 11, செவ்வாய்கிழமை அதிகாலை 2 மணிமுதல் 10 மணிவரையிலும் ஆன்லைன் வங்கிச் சேவைகளைப் பெற முடியாது எனவும் முன்திட்டமிடப்பட்ட கணினி பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதே இந்த தடங்கலுக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கியின் மொபைல் அப்ளிகேஷன், ஆன்லைன் பேங்கிங், ஸ்மார்ட் பிசினஸ், ஸ்மார்ட் டிரேட் மற்றும் பங்குச்சந்தை முதலீடு ஆகியவற்றை வாடிக்கையாளர்களால் மேற்கொள்ள முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, பணம் மற்றும் செக் டெப்பாசிட் மிஷின்கள், ஊடாடும் தகவல் இயந்திரம் (interactive teller machines), உரையாடல்கள் (வாட்சாப் வழியாக), கால் மூலமாக உதவி பெரும் வசதிகளையும் மக்களால் பயன்படுத்தமுடியாது என வங்கி தெரிவித்துள்ளது.

இருப்பினும் போன் பேங்கிங், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலமாக ATM களில் பணம் எடுக்கவும் அல்லது ஷாப்பிங் கடைகளில் இவற்றின் மூலமாக பொருட்களை வாங்கவும் முடியும் என வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.