UAE Tamil Web

பேருந்து ஓட்டுநர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ரோபோட்!

தொழில்நுட்ப வளர்ச்சியில் வல்லரசு நாடுகளுக்கு இணையாக அமீரகம் போட்டிப்போட்டுக் கொண்டு வளர்ந்து வருகிறது. கண்காணிப்பு கேமிராக்கள் தொடங்கி தானியங்கி ரோபோக்கள் வரை அமீரகத்தின் வளர்ச்சி பல நாடுகளை வாய் பிளக்க வைத்துள்ளது.

அந்த வரிசையில் துபாய் போக்குவரத்து ஆணையம் ரோபோவை கொண்டு பயிற்சி ஓட்டுநர்களுக்கு பாடம் எடுக்க வைத்து அசத்தியுள்ளது. AI தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோக்கள் செய்முறை அல்லாத பிற வகுப்புகளை மட்டும் துல்லியமாக எடுக்கும் திறன் கொண்டது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த நடைமுறை கையாளப்பட்டு வருகிறது. போக்குவரத்து விதிகள், ஓட்டுநர்களின் பாதுகாப்பு, சாலையை பயன்படுத்தும் விதமாக உள்ளிட்டவற்றை எடுத்துக்காட்டுடன் ரோபோக்கள் சிறப்பாக விளக்குவதால் பயிற்சி மாணவர்களும் உற்சாகமாக பாடம் படிப்பதாக துபாய் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து ரோபோக்களை கொண்டு பாடம் சொல்லிக் கொடுக்கும் முறையை மேம்படுத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap