UAE Tamil Web

ஷார்ஜா: தேவைப்படுவோருக்கு இலவச உணவு வழங்கும் உணவகம்.! நெகிழ வைக்கும் தம்பதியர்..

free

ஷார்ஜாவில் உள்ள நேஷனல் பெயிண்ட்ஸ்களுக்கு(National Paints) அருகில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் சுஜாத் அலி – ஆயிஷா அப்ரர் தம்பதியரால் துவக்கப்பட்ட உணவகம் தான் பிரியாணி ஸ்பாட்.

- Advertisment -

புதிதாக திறக்கப்பட்ட தங்களது உணவகத்தில் மீதமுள்ள உணவை என்ன செய்வது என்பது குறித்து தம்பதியர் குழப்பமின்றி தெளிவினை முடிவெடுத்து பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளனர். அவரக்ளுக்கு அருகிலுள்ள உணவகங்கள் இரவு 10 மணியோடு மூடப்பட்டாலும், தம்பதியர் தங்களது உணவகத்தில் ஒரு இலவச கவுன்ட்டரை அதன் பிறகு திறந்து வைத்திருக்கிறார்கள்.

free3

உணவு தேவை இருந்தும் அதை வாங்க இயலாமல் அவதிப்படும் எவருக்கும் சூடான உணவு பேக் அந்த கவுன்ட்டர் மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது. இது பற்றி கூறியுள்ள சுஜாத் அலி, இப்பகுதியில் நல்ல உணவை சாப்பிட வேண்டும் என்றால் தொழிலாளர்கள் ஏராளமான பணம் செலவு செய்யும் சூழல் இருப்பதை பார்த்தோம். எனவே அவர்களுக்கு தகுந்த விலையில் தரமான உணவை வழங்கவே இந்த உணவகத்தை திறந்தோம்.

free1

முன்னதாக, நான் இது போல வேறொரு முயற்சியில் கூட்டு சேர்ந்து ஈடுபட்டேன் அப்போது உணவு தேவைப்பட்ட சுமார் 8,000 மக்களுக்கு உணவளிக்க ஒரு தொண்டு முயற்சியைத் தொடங்கினோம். அப்போது பெரும்பாலான தொழிலாளர்களுக்கு அவர்களின் வருமானத்திற்கு ஏற்ற வகையில், மலிவு விலை உணவு கிடைக்கவில்லை என்பதை நான் உணர்ந்தேன்”என்று கூறினார்.

இந்நிலையில் இவர்களது உணவகத்தில் ஒவ்வொரு நாள் முடிவிலும் குறைந்தது 20 பேருக்கான உணவு எஞ்சி இருப்பதை கண்டனர். எனவே நாள் முடிவில் கைப்படாத மீதமுள்ள உணவை, இலவச உணவு தேவைப்படும் எவருக்கும் கொடுத்து உதவலாமே என்று சுஜாத்திற்கு யோசனை தெரிவித்துள்ளார் ஆயிஷா.

மனைவியின் யோசனையை செயல்படுத்தியது பற்றி கூறியுள்ள சுஜாத், “இரவு 10 மணிக்கு மேல் எங்கள் உணவகத்தை நாடி வரும் எவருக்கும் நாங்கள் உணவை பேக் செய்து தருகிறோம். பல குடும்பங்கள், கேப் ஓட்டுனர்கள் மற்றும் நீல காலர்(blue-collared) தொழிலாளர்கள் உணவு கேட்க வெட்கப்படுகிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு என்ன சொல்லி எங்களிடம் இலவச உணவை கேட்பது என்று தயங்குகிறார்கள். ஆனால் இலவச உணவை கேட்டு வரும் யாரிடமும், அவர்களின் அடையாளத்தைப் பற்றி எதுவும் கேட்கக்கூடாது என்ற கொள்கையை கடுமையாக கடைபிடிக்கிறோம்”என்றார்.

free2

மேலும் பேசிய சுஜாத் லாபத்தை வேறு விதமாக வரையறுக்கிறார். பொதுவாக வணிகங்கள் எதை விற்றாலும் 60 முதல் 70% லாபம் பெறும். எல்லா வகையான மக்களுக்கும் உணவு கிடைக்கச் செய்வதே எனது நோக்கம். என்னைப் பொறுத்தவரை, அதிக எண்ணிக்கையிலான மக்களை சென்றடைவது லாபத்திற்கு சமம் என்று குறிப்பிட்டுள்ளார்.

சுஜாத்தின் உணவகம் ஒரு ஃபுல் பிளேட் சிக்கன் பிரியாணியை 8 திர்ஹம்க்கு வழங்குகிறது. ஒரு பெரிய பாகிஸ்தான் பராத்தா மற்றும் டீ 2 திர்ஹம். இங்கு அசைவ உணவு வகைகளில் பெரும்பாலானவை 5 திர்ஹம்ஸ்க்கு கீழ் விற்கப்படுகிறது, அதே நேரத்தில் பருப்பு (பயறு) மற்றும் காய்கறிகளின் விலை 2 முதல் 3 திர்ஹம்ஸ்க்கு இடையில் உள்ளது.

எனக்கு உணவு மற்றும் பானம் துறையில்(food and beverage industry) நிபுணத்துவம் உள்ளது. வியாபாரம் மட்டுமின்றி அனைவருக்கும் ஆரோக்கியமான உணவை வாங்க உதவுவதே எனது நோக்கம். உங்கள் நல்ல பக்கத்தை ஆராய்ந்தாலே போதும், சமூகத்திற்கு சேவை செய்வதற்கான வழிகளை நீங்களே காண்பீர்கள். மிக முக்கியமான விஷயம் உங்கள் நோக்கம். உங்கள் தார்மீக ஆதரவும், இரக்கமும் மற்றவர்களுக்கு நிறைய நன்மைகளை செய்யும் என்று சுஜாத் அலி குறிப்பிட்டுள்ளார்.