UAE Tamil Web

வேற லெவல் டெக்னாலஜி: அமீரகத்தின் முதல் கேஷியர் இல்லாத சூப்பர் மார்க்கெட் : பில் போட நிற்கவேண்டாம்; எல்லாம் ஆட்டோமேட்டிக்..!

carrefour-plus-4

துபாயில் உள்ள மால் ஆஃப் தி எமிரேட்ஸ் -ன் உள்ள கேரிஃபோர் சிட்டி+ (Carrefour City+) ல் புதிய தொழில்நுட்பம் ஒன்றினைத் துவங்கியுள்ளது மஜீத் அல் புட்டைம் குரூப்.

இங்கே நீங்கள் பொருட்களை எடுத்துக்கொண்டு பில் போட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு நீங்கள் வெளியேறலாம். ஆனால் பணம் எப்படி செலுத்துவது?

MAF Carrefour App-ஐ டவுன்லோடு செய்துவிட்டு, கேரிஃபோர் சிட்டி+ க்குள் நுழைந்து உங்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்தால், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலமாக நீங்கள் எடுத்த பொருட்களின் பெயர், அவற்றின் விலை ஆகியவை அப்ளிகேஷனின் டிஜிட்டல் பாஸ்கெட்டில் தோன்றும்.

ஷாப்பிங் முடிந்ததா? எடுத்த பொருட்களோடு வெளியே செல்ல வேண்டியதுதான். சிறப்பு வாயில்களை நீங்கள் கடந்த உடனேயே தாமாகவே உங்களது பில்லிற்கான தொகை அப்ளிகேஷன் மூலமாக வசூலிக்கப்பட்டுவிடும்.

அப்படியானால் இது சிறிய கடையாக இருக்குமோ எனத் தோன்றினால் மன்னிக்கவும். இங்கே ஸ்நாக்ஸ், குளிர்பானங்கள், பாக்கெட் உணவுப் பொருட்கள் என 1,300க்கும் அதிகமான உணவுப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

அட, இன்னும் நம்பலையா? கீழே வீடியோவைப் பாருங்க..

 

View this post on Instagram

 

A post shared by Carrefour UAE (@carrefouruae)

இதுகுறித்துப் பேசிய இந்நிறுவனத்தின் மூத்த நிர்வாக அதிகாரி ஹனி வேய்ஸ்,” அமீரகத்தின் சில்லறை வர்த்தகத்தில் கேரி ஃபோர் சிட்டி+ எடுத்திருக்கும் இந்த முயற்சி பெரும்பாய்ச்சல் ஆகும். எதிர்கால மக்களின் தேவைக்கு இப்போதே நாங்கள் தயாராகி வருகிறோம்” எனக் குறிப்பிட்டார்.

carrefour-plus-4
8 Shares
Share via
Copy link
Powered by Social Snap