34.3 C
Dubai
July 14, 2020
UAE Tamil Web

கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தவர்கள் மட்டும் அபுதாபிக்குள் நுழையலாம்!

Abu-Dhabi_

அபுதாபி அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ” அபுதாபிக்குள் நுழைய விரும்புபவர்களில், பயண நேரத்திற்கு முன்பான 48 மணி நேரத்திற்குள்ளாக கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு முடிவுகளில் நெகட்டிவ் என வந்தவர்கள் மட்டுமே அபுதாபிக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனை முடிவுகளை Al Hosn அப்ளிகேஷன் வழியாகவோ அல்லது ஏதாவது மருத்துவமனை அல்லது தேசிய பரிசோதனை திட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்ட அமீரக ஆய்வகங்கள் அனுப்பியிருக்கும் குறுஞ்செய்தியின் மூலமாகவோ அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டும்.

அஞ்சல் மற்றும் அனைத்து விதமான சரக்குப் போக்குவரத்திற்கு இந்த நடைமுறையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபி காவல்துறை மற்றும் அபுதாபி சுகாதாரத்துறை ஆகியவை இணைந்து இம்முடிவை எடுத்து பின்னர் அறிவித்திருக்கின்றனர்.

மக்கள் வாகனங்களுக்குள்ளும் முகக் கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் ஆகிய பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அபுதாபியைச் சேர்ந்திராத தொழிலாளர்கள் அபுதாபிக்குள் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் நம்பிக்கையளிக்கும் விதத்தில் பலனளிக்கவே இந்த முடிவானது எடுக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க.!