35.4 C
Dubai
May 25, 2020
UAE Tamil Web

ரமலானை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சிறை கைதிகளுக்கு விடுதலை அளித்த ஐக்கிய அரபு அமீரகம்..!

crime

அபுதாபி

Abu dhabi
Image Credits- Khaleej Times

புனித ரமலானை முன்னிட்டு அபுதாபியில் 1511 சிறைக்கைதிகளுக்கு விடுதலை அளிக்க ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதியும், ஆயுதப்படைகளின் உச்ச தளபதியும், அபுதாபியின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீபா பின் சையத் அல் நஹ்யான் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, விடுதலை செய்யப்பட்ட சிறைக்கைதிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளார். இது ஷேக் கலீபாவின் மனிதாபிமான செயலின் வெளிப்பாடாகும். இதன் மூலம் அவருடைய கொள்கைகளான மன்னிக்கும் தன்மை மற்றும் சகிப்புத்தன்மை பிரதிபலிக்கின்றது. மேலும் இது சிறைக்கைதிகளுக்கு அவர்களின் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்குவதற்கு ஒரு நல்வாய்ப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு வருடா வருடம் தண்டனை விதிக்கப்பட்ட காலத்தில் கைதிகளின் நன்னடத்தை மற்றும் நல்லொழுக்கம் காரணமாக கைதிகளை விடுதலை செய்யப்படுவது வழக்கமாகும். ஷேக் கலீபாவின் இந்த செயலானது, சிறை கைதிகள் தங்களின் குடும்பத்தோடு ஒன்றிணைவது மற்றும் குடும்ப உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனிமித்தம் தாய்மார்களும், குழந்தைகளும் மகிழ்ச்சி அடைவதோடு, விடுவிக்கப்பட்ட கைதிகள் அவர்களின் எதிர்காலத்தை பற்றி மீண்டும் ஒருமுறை சிந்திக்கவும், சமூக பாதையில் வெற்றிகரமாக முன்னேறி செல்வதற்கும் வாய்ப்பாக அமைகிறது.

துபாய்

Dubai
Image Credits- Khaleej Times

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத்தலைவரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு 874 சிறை கைதிகளை விடுவிக்குமாறு புதன்கிழமையன்று (நேற்று) உத்தரவிட்டார்.

இதுகுறித்து துபாயின் அட்டர்னி ஜென்ரல் அதிபர் எஸ்ஸாம் இசா அல் ஹுமாய்டன் கூறும்போது, சிறை கைதிகளின் விடுதலை காரணமாக அவர்களின் குடும்பங்களுக்கு மகிழ்ச்சி கிடைப்பதோடு, சமூகத்தில் திரும்பவும் ஒன்றிணைவதற்கும், அவர்களின் வாழ்க்கையை புத்துணர்ச்சியாக மீண்டும் தொடங்குவதற்கும் ஒரு வாய்ப்பாக அமையும் என்று கூறினார்.

பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீபா பின் சயத் அல் நஹ்யான் அவர்களின் உத்தரவுப்படி, 1511 சிறை கைதிகளை விடுதலை செய்ததை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஷார்ஜா 

Sharjah
Image Credits- Khaleej Times

ரமலானை முன்னிட்டு ஷார்ஜாவின் ஆட்சியாளர் மற்றும் உச்ச குழுவின் உறுப்பினருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் டாக்டர் சுல்தான் பின் முகமது அல் காஸிமி அவர்கள், 369 சிறைக் கைதிகளை நன்னடத்தை மற்றும் நல்லொழுக்கம் காரணமாக மன்னிப்பு வழங்கி விடுவிக்குமாறு, ஷார்ஜாவின் தண்டனை மற்றும் திருத்த அமைப்பிற்கு (Punitive and Correctional Institution) உத்தரவிட்டார்.

ஷேக் டாக்டர் சுல்தான் அவர்களின் இந்த செயல் குறித்து சார்ஜா காவல்துறைத் தளபதி மேஜர் ஜெனரல் சைஃப் அல் ஸாரி அல் ஷம்ஸி, வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டதோடு, இச்சம்பவம் மூலம் குடும்பங்களின் மனதில் ஒருவித மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஷேக் டாக்டர் சுல்தான் கொண்டு வந்துள்ளார் என்று புகழாரம் சூட்டினார்.

இந்த புனித மாதத்தில் விடுதலை செய்யப்பட்டவர்கள் அனைவருக்கும் இனிவரும் நாட்கள் நல்லபடியாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும் விடுதலை செய்யப்பட்டவர்கள் கற்றுக் கொண்ட அனுபவம் மற்றும் பங்களிப்பின் படி மீண்டும் சமூகத்தில் இணைந்து நல்வாழ்வு வாழவும் அறிவுறுத்தினார்.

 

View this post on Instagram

 

حاكم الشارقة يعفو عن “369” نزيلاً بالمؤسسة العقابية والإصلاحية بالشارقة أمر صاحب السمو الشيخ الدكتور سلطان بن محمد القاسمي عضو المجلس الأعلى حاكم الشارقة، بالإفراج عن “369” نزيلاً، من الذين يقضون فترة محكوميتهم بإدارة المؤسسة العقابية والإصلاحية بالشارقة، وانطبقت عليهم شروط العفو، وثبتت أهليتهم للتمتع بالعفو وفق شروط حسن السيرة، والسلوك، وذلك بمناسبة حلول شهر رمضان المبارك . وبهذه المناسبة رفع اللواء سيف الزري الشامسي قائد عام شرطة الشارقة، أسمى آيات الشكر والتقدير إلى صاحب السمو حاكم الشارقة، على مكرمة سموه بالعفو عن المحكومين، والتي تأتي انطلاقاً من حرص سموه على دعم كيان الأسرة، والمحافظة على استقرارها، وإدخال البهجة والسرور إلى نفوس أسر المحكومين وعائلاتهم وأبنائهم في هذه الأيام المباركة، آملاً أن تكون هذه المكرمة باعثاً للخير في نفوس المفرج عنهم، وسبيلاً إلى الاستفادة من دروس تجربتهم، والعودة إلى المجتمع أفراداً صالحين يسهمون في تعزيز أمنه واستقراره، والمشاركة في مسيرة نهضته الشاملة التي تتبناها قيادتنا الرشيدة.

A post shared by شرطة الشارقة (@shjpolice) on

ராஸ் அல் கைமா

RAK
Image Credits- Khaleej Times

புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு உச்ச குழு உறுப்பினரும், ராஸ் அல் கைமாவின் ஆட்சியாளருமான H.H. ஷேக் சவுத் பின் சக்ர் அல் காஸிமி அவர்கள், 584 கைதிகளை விடுவிக்க அமீரகத்தில் உள்ள திருத்தம் மற்றும் தண்டனை அமைப்பிற்கு (correctional and penal institutions) உத்தரவிட்டுள்ளார்.

மேலும் ரமலான் துவங்குவதற்கு முன்னரே அவர்களின் விடுதலையைச் செயல்படுத்துமாறு அமீரகத்தின் நீதிமன்றம் மற்றும் காவல்துறை உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதோடு, சிறை கைதிகளின் கடன்களையும் நீக்கியுள்ளது மனித நேயத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

இது குறித்து, அமீரகத்தின் அட்டர்னி ஜெனரல் ஹசன் சயீத் முகமது கூறுகையில், புனித ரமலான் மாதத்தில் கைதிகளுக்கு ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கும், சமூகத்தில் மீண்டும் ஒன்றிணைந்து, அவர்களது குடும்பங்களோடு மகிழ்ச்சியாக வாழ்வதற்காகவும் இந்த வாய்ப்பை H.H. ஷேக் சவுத் பின் சக்ர் அல் காசிமி அவர்கள் வழங்கியதை சுட்டிக்காட்டினார்.

புஜைரா

fujairah
Image Credits- Khaleej Times

புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு 72 கைதிகளை விடுவிக்க உச்ச குழு உறுப்பினரும், புஜைராவின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய H.H. ஷேக் ஹமாத் பின் முகமது அல் ஷர்கி உத்தரவிட்டார்.

இந்த கைதிகள் அனைவரும் வெவ்வேறு தேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் நன்னடத்தை காரணமாக சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து கூறிய அல் புஜைரா காவல்துறையின் தளபதி மேஜர் ஜெனரல் முகமது அகமது பின் கானிம் அல் கபி, புஜைரா ஆட்சியாளருக்கு நன்றி மற்றும் பாராட்டுகளைத் தெரிவித்தார். இச்செயல் மூலம் விடுதலையடைந்த கைதிகள் அவர்களின் குடும்பங்களோடு மகிழ்ச்சியாக இருக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று நம்பிக்கை தெரிவித்தார்.

நன்னடத்தை காரணமாக மன்னிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட கைதிகளுக்கு ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்காகவும், சமூகத்தில் அவர்கள் மீண்டும் ஒன்றிணையவும், அவர்களது குடும்பங்களின் கஷ்டங்களை குறைப்பதற்காகவும் H.H ஷேக் ஹமாத் ஆர்வம் காட்டியதன் விளைவாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உம் அல் குவைன்

Umm Al Quwain
Image Credits- Khaleej Times

ரமலான் பண்டிகையையொட்டி உச்ச குழு உறுப்பினரும், உம் அல் குவைனின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் சவுத் பின் ரஷீத் அல் முல்லா அவர்கள், பல்வேறு குற்றங்களுக்காக சிறை தண்டனைகளை அனுபவித்து வரும் பல கைதிகளை விடுவிக்க உம் அல் குவைனில் உள்ள தண்டனை மற்றும் திருத்த (punitive and corrective institutions) அமைப்பிற்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, நன்னடத்தை காரணமாக மன்னிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட கைதிகளுக்கு ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கும், அவர்களது குடும்பத்தினரின் துன்பங்களை குறைப்பதற்கும் ஷேக் சவுத் காட்டிய ஆர்வத்தின் விளைவாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜ்மான்

Ajman
Image Credits- Khaleej Times

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, தண்டனை விதிக்கப்பட்ட காலத்தில் நன்னடத்தை மற்றும் நல்லொழுக்கம் காரணமாக 124 கைதிகளை விடுவிக்க அஜ்மானின் ஆட்சியாளரும், உச்ச குழு உறுப்பினருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹுமைத் பின் ரஷீத் அல் நுவைமி உத்தரவிட்டுள்ளார்.

விடுவிக்கப்பட்ட கைதிகள் பல்வேறு தேசங்களைச் சேர்ந்தவர்கள். மன்னிக்கப்பட்ட கைதிகள் புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கும், அவர்களது குடும்பத்தினரின் துன்பங்களைத் தணிப்பதற்கும் ஒரு வாய்ப்பை வழங்க ஷேக் ஹூமைட் ஆர்வம் காட்டியதன் ஒரு பகுதியாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Sources: Khaleej Times & WAM

மற்ற சில பதிவுகள்