UAE Tamil Web

பாலைவனத்தில் வழி தெரியாமல் சிக்கிய 3 பேர் – 2 நாள் உணவின்றி தவித்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்பு!

அபுதாபியில் உள்ள பாலைவனத்திற்கு 3 பேர் சாகச பயணம் மேற்கொண்டுள்ளனர். எதிர்பாராதவிதமாக 3 பேரும் வழி தெரியாமல் பாலைவனத்திலேயே சிக்கிக் கொண்டனர். உணவு, தண்ணீர் இல்லாமல் சோர்வடைந்த அவர்கள், அங்கிருந்து வெளியேற முடியாமல் உயிருக்குப் போராடினர். இது தொடர்பாக அபுதாபி கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தேசிய மீட்புக் குழுவினர் பாலைவனத்தில் மாயமான மூவரையும் தீவிர தேடுதலுக்குப் பின்னர் ஒருவழியாக கண்டுபிடித்தனர். தொடர்ந்து அவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக ஷேக் ஷக்ட்போட் மெடிக்கல் சிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாலைவனத்திற்கு சாகச பயணம் செல்ல விரும்புவோர் முறையான பாதுகாப்பு அம்சங்களுடன் உரிய முறையில் தகவல் தெரிவித்துச் செல்ல வேண்டும் என தேசிய மீட்புக் குழு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

2 Shares
Share via
Copy link