UAE Tamil Web

அமீரக Mahzooz Draw.. தமிழர் வீரா உள்பட இரு இந்தியர்களுக்கு அடித்தது யோகம் – ஒரே நாளில் லட்சாதிபதிகளான 3 வெளிநாட்டினர்

கடந்த வாரம் அமீரகத்தில், EWINGSல் நடத்தப்படும் 80வது Mahzooz Raffle டிராவில், மூன்று வெளிநாட்டவர்கள் தலா 1,00,000Dh வென்றுள்ளனர். பிலிப்பைன்ஸைச் சேர்ந்த நார்மன் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த வீரா மற்றும் சியாம் ஆகியோர் தான் அதே மூன்று அதிர்ஷடசாலிகள்.

மூன்று வெற்றியாளர்களும் தங்கள் குடும்பங்களுக்கு உதவ இந்த பணத்தை பயன்படுத்தபோவதாக கூறியுள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளாக அமீரகத்தில் இருக்கும் 44 வயதான பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த நார்மன், சரியான நேரத்தில் தான் இந்த பணம் தனக்கு வந்து சேர்ந்துள்ளதாக கூறுகிறார்.

பிலிப்பைன்ஸில் தனது தாயாரை ஆதரித்து காப்பாற்றிவரும் அவர் : “எனக்கு பல கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டு செலுத்துதல்கள் நிலுவையில் இருந்தன, ஆனால் தற்போது எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. என் வாழ்க்கையை மாற்றியதற்காக மஹ்சூஸுக்கு நன்றி கூறுகிறேன் என்றார்.

இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரா, அமீரகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவாகவே வசித்துவருகின்றார். வீரவிற்கு இரண்டு மகள்கள் உள்ளனர், ஓட்டுநராக இங்கு பணிபுரியும் வீராவிற்கு அவர் வாழ்வை மற்றும் நிகழ்வு mahzooz மூலம் நடந்துள்ளது.

இறுதியாக, இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த சியாம், துபாயில் தொழில்நுட்ப வல்லுநராக பணிபுரிகிறார். அவர் ஏழு ஆண்டுகளாக அமீரகத்தில் வசித்து வருகின்றார், ​அவரது குடும்பம் இந்தியாவில் உள்ளது. சியாம் தான் வென்ற பணத்தை எப்படிச் செலவழிப்பது என்று யோசித்துக்கொண்டே இருக்கிறார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap