துபாயின் 70வது வாராந்திர மஹ்சூஸ் ரேஃபிள் டிராவில் மூன்று இந்தியர்கள் தலா 1 லட்சம் திர்ஹம்ஸை பரிசாக வென்று அசத்தியுள்ளனர்.
ஷார்ஜாவில் பணிபுரிந்து வரும் இந்தியாவைச் சேர்ந்த 55 வயதான சுப்ரமணியனும், சவூதி அரேபியாவில் வசிக்கும் மற்ற இரண்டு இந்தியர்களும் 70வது வாராந்திர நேரடி மஹ்சூஸ் டிராவில் தலா 1 லட்சம் திர்ஹம்ஸை வெற்றுள்ளனர்.
பரிசுத் தொகைப் பெற்ற மூன்று வெற்றியாளர்களும் தங்கள் மகள்களின் கனவுகளுக்கு செலவிட இருப்பதாக தெரிவித்தனர்.
“வெற்றிபெற்றது குறித்து சுப்ரமணியம கூறுகையில், நான் மஹ்சூஸ் டிராவில் 5வது முறை வெற்றி பெற்றுள்ளேன். இதில் பங்கேற்பதால் கனவுகளை அடைந்து வெற்றி பெற முடிகிறது. இதற்கு அனவரும் செய்ய வேண்டியது தவறாமல் பங்கேற்பதுதான்” என்றார்.
சவூதி அரேபியாவில் வசிக்கும் 54 வயதான இப்ராஹீம், மருத்துவ படிப்பு படிக்கும் தனது மகளுக்கு வெற்றிபெற்ற தொகை உதவும். இந்தப் பணம் மகளின் வாழ்க்கையை மேம்படுத்தவும், அவளுடைய இலட்சியங்கள் மற்றும் இலக்குகளை நிறைவேற்றவும் உதவும்” என்றார்.
மற்றோரு வெற்றியாளரான 54 வயதான சுபாஷ் சந்திரா, “எனது மகளுக்கு அடுத்த வருடம் திருமணம் நடைபெறவுள்ளது. கடனில் சிக்காமல் ஆடம்பரமான ஒரு திருமணத்தை நடத்த உள்ளேன். குடும்பத்துக்காக வெளிநாட்டில் அர்ப்பணித்த நான் வெற்றிபெற்ற பணத்தை தனது மகனின் கல்விக்காகவும், அமீரகத்தில் தனது குடும்பத்துடன் விடுமுறைக்காகவும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளேன்” என்றார்.