அபுதாபியில் சட்டவிரோதமாக பயங்கர ஆயுதங்களை வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அபுதாபியில் இரண்டு ஆசிய நாட்டவர்கள் மற்றும் ஒரு ஆப்பிரிக்க நாட்டவர் சட்டவிரோதமாக பயங்கர ஆயுதங்களை விற்பனை செய்துவருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து குற்றவியல் பாதுகாப்புப் பிரிவின் சிறப்பு ரோந்து துறையின் அல் மிர்சாத் துறையுடன் இணைந்த அல் தஃப்ராவில் உள்ள அல் மிர்சாத் கிளை, ஆயுதங்களை விற்பனை செய்யும் மூவரையும் குழு அமைத்துப் பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டது.
பின்னர் சட்டவிரோதமாக பயங்கர ஆயுதங்களை வைத்திருந்து விற்பனை செய்த 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். விசாரணையில் அவர்களிடம் இருந்த வாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
அபுதாபியில், தனி நபர்களுக்கும், சமூகத்திற்கும் தீங்கு விளைவிக்கும் தடைசெய்யப்பட்ட நடவடிக்களைக் கட்டுப்படுத்துவதில் மும்முரமாக இருப்பதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.