UAE Tamil Web

அமீரகத்தில் மேலும் 3 குரங்காமை வழக்குகள்.. மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் மிகவும் கவனமாக செயல்பட எச்சரிக்கை – சுகாதார அமைச்சகம்

அமீரகத்தில் மேலும் மூன்று புதிய குரங்கம்மை வழக்குகள் பதிவாகியுள்ளன, சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு அமைச்சகம் (MoHAP) அனைத்து சமூக உறுப்பினர்களையும் தகுந்த தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றவும், பயணத்தின் போது அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கையாளவும் அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக பொதுமக்கள் அதிக அளவிலான கூட்டத்தில் பயணிக்கும்போது மிகுந்த பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. “குரங்கம்மை ஒரு வைரஸ் நோயாகும், பாதிக்கப்பட்ட நபர் அல்லது விலங்குடன் நெருங்கிய தொடர்பில் வரும்போது இந்த நோய் பரவ அதிக வாய்ப்பு உள்ளது.

தாயின் கருவில் உள்ள குழந்தைக்கும் இது பரவு வாய்ப்பு உள்ளது என்று அமைச்சகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது அமீரகத்தில் பதிவாகியுள்ள 3 புதிய வழக்குகள் பற்றி எந்தவித தகவலையும் சுகாதார அமைச்சகம் வெளியிடவில்லை.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடையும் வரை மருத்துவமனைகளில் முழுமையாக தனிமைப்படுத்தப்படுவதும், அவர்களின் நெருங்கிய தொடர்புகளை குறைந்த காலத்திற்கு தனிமைப்படுத்துவதும் அமீரகத்தில் முதற்கட்ட பாதுகாப்பு நடவடிக்கையாக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது அமீரகத்தில் 4 வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் இதை நினைத்து பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap