UAE Tamil Web

இந்தியா-அமீரகம் இடையே துவங்கிய விமான போக்குவரத்து – டிக்கெட்டுகளின் விலை விலை எவ்வளவு தெரியுமா?..!

abudhabi airport

நீண்ட காலப் பயணத்தடைக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து அமீரக ரெசிடென்சி விசா வைத்திருப்பவர்கள் அமீரகம் திரும்பலாமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரெசிடென்சி வைத்திருக்கும் பல இந்தியர்கள் அமீரகம் திரும்ப முயற்சித்து வருகின்றனர்.

ICA மற்றும் GDRFA ஒப்புதல், பிசிஆர் பரிசோதனை குறித்த விதிமுறைகளினால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக பல இந்தியர்களால் உடனடியாக அமீரகம் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சென்னை துபாய் இடையே விமான டிக்கெட் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இன்று (ஆகஸ்டு 5) சென்னை – துபாய் செல்லும்  ஏர் இந்தியா விமானத்தின் டிக்கெட் 23,315 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இண்டிகோ விமானத்தின் டிக்கெட்டும் 20,000 – 24,000 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது.

நாளை, இதே ரூட்டில் பயணிக்கும் ஃபிளை துபாய் டிக்கெட் 22,854 ரூபாயாகவும் எமிரேட்ஸ் – 26,251 ரூபாயாகவும் இண்டிகோ – 25,599 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக விஸ்டாரா – 43,970 ரூபாய்க்கும் ஸ்பைஸ் ஜெட் 58,415 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து டிராவல் ஏஜென்சிக்களைத் தொடர்புகொண்டு நமது குழு விசாரித்தது. பயணத்தடை விலக்கப்பட்டுள்ளதால் ஏராளமான இந்தியர்கள் அமீரகம் வர ஆயத்தமாகி வருகின்றனர். இதனால் டிக்கெட்டிற்கு டிமாண்ட் அதிகரிக்கும். இதன் காரணமாக டிக்கெட் விலை ஏறலாம் என ஏஜெண்ட்கள் தெரிவித்தனர்.

abudhabi airport
27 Shares
Share via
Copy link
Powered by Social Snap