UAE Tamil Web

டோக்கியோ பாராலிம்பிக்ஸில் அமீரகத்திற்கு 3வது பதக்கம்!

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் 800 மீட்டர் பந்தயத்தில் அமீரக வீரர் ஹம்மாதி கலந்து கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற பந்தயத்தில் சிறப்பாக விளையாடிய ஹம்மாதி போட்டி தூரத்தை 1:45.59 கடந்து 2ம் இடத்தை பிடித்தார். முதல் இடத்தில் துனிசியா வீரர் வாலித் தட்டிச் சென்று தங்கம் சூடினார். அட்டகாசமாக விளையாடிய ஹம்மாதிக்கு வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட்டது. ஏற்கனவே 100 மீட்டர் பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற நிலையில் இது அவருக்கு 2வது பதக்கம் ஆகும். கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் அப்துல்லா சுல்தான் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். இதன் மூலம் பாராலிம்பிக்ஸில் அமீரகம் வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. பதக்கங்களை வென்ற இருவருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

0 Shares
Share via
Copy link