UAE Tamil Web

இந்தியாவிலிருந்து அமீரகத்திற்கு விமானம் இயக்கப்படவில்லை என்றால் .. கஷ்டம் தான் – பெரும் சரிவைச் சந்தித்துவரும் அமீரக விமான நிலையங்கள்..!

Stock-Abu-Dhabi-airport-passengers_

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவிவரும் வேளையில் இந்தியா – அமீரகம் இடையே விமானப் போக்குவரத்தை அமீரக அரசு தற்காலிகமாக தடை செய்தது. இதனால் இந்தியாவில் இருந்து அமீரகம் வரமுடியாமல் பல பயணிகள் இந்தியாவில் சிக்கிக்கொண்டனர்.

இந்தியா – அமீரகம் இடையே நாள்தோறும் அதிகமானோர் பயணிப்பது வழக்கம். கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை இந்த பிசியான ரூட்டை மூடிவிட்டது. இதனால் அமீரகத்திற்கு வரும் பயணிகளின் மொத்த எண்ணிக்கை குறையத் துவங்கிங்கியுள்ளது.

இந்தியர்களின் வருகை குறைந்ததால், அமீரக விமான நிலையங்களில் 30 சதவீத அளவிற்கு மொத்த பயணிகள் வருகை குறைந்துள்ளதாக ஆசிய – பசிபிக் பிராந்தியத்திற்கான சர்வதேச விமான நிலைய கவுன்சிலின் இயக்குனர் ஜெனரல் ஸ்டேபனோ பரோன்சி தெரிவித்துள்ளார்.

“இந்தியா – அமீரகம் இடையேயான பயணத்தடை எப்போது விலக்கப்படும் என்பது குறித்து தகவலில்லை. இருப்பினும் சிக்கிக்கொண்டுள்ள இந்தியரையும் அத்தியாவசியப் பொருட்களையும் விமானங்கள் கொண்டுவருகின்றன. அதேபோல, உள்நாட்டு விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டிற்கு விமானப் போக்குவரத்து மிக இன்றியமையாதது” என்றார்.

இந்தியாவில் கொரோனா வழக்குகள் நாள்தோறும் 4 லட்சத்தை தொடுவதால் இதுவரையில் 14 க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவில் இருந்து பயணிகள் தங்களது நாட்டிற்கு வரத் தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.