37.4 C
Dubai
August 10, 2020
UAE Tamil Web

அமீரகத்திலிருந்து தமிழகத்திற்குச் செல்லும் 61 விமானங்களின் முழு நீள பட்டியல் – வந்தே பாரத் திட்டத்தின் 5 ஆம் பகுதியில் முக்கியத்துவம் பெறும் தமிழகம்..!

emiratesjan

வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை தாயகம் அழைத்துச் செல்லும் பொருட்டு, வந்தே பாரத் திட்டம் எனும் சிறப்பு விமான சேவையைத் துவங்கி செயல்படுத்திவருகிறது இந்திய அரசு. இந்நிலையில் இத்திட்டத்தின் ஐந்தாம் பகுதி ஆகஸ்டு 1 ஆம் தேதியிலிருந்து துவங்கும் என இந்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இதனிடையே ஆகஸ்டு 2 ஆம் தேதியிலிருந்து ஆகஸ்டு 31 ஆம் தேதிவரையில் அமீரகத்தின் ஷார்ஜா, துபாய் மற்றும் அபுதாபியிலிருந்து தமிழகத்தின் சென்னை, திருச்சி மற்றும் மதுரைக்கு 61 விமானங்கள் இயக்கப்பட இருக்கின்றன.

தமிழகத்திற்கு இயக்கப்படும் இந்த சிறப்பு விமானங்களின் பயண விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

uae-tamilnadu

அமீரகத்தில் தவித்துவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் கொரோனா காரணமாக வேலையிழந்து, போதிய ஊதியம் கிடைக்காமல் தவிந்துவரும் நிலையில், தமிழகத்திற்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் வந்தே பாரத் திட்டத்தின் 5 ஆம் பகுதியில் தமிழர்களுக்கு 61 விமானங்கள் இயக்கப்படும் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்திருக்கிறது. இதனால் அமீரக வாழ் தமிழ் மக்கள் பெருமகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

இந்த பயண விபரத்தை PDF வடிவில் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Source: Ministry of External Affairs of India

இதையும் படிங்க.!