சுற்றுலா பயணிகளுக்கு இலவச சிம் கார்டு – ICA அறிவிப்பு !

Tourists Free Sim Card initial validity 30 days

இனி சுற்றுலா பயணிகள் அமீரகத்திற்கு வருகை தரும்போது இலவசமாக அலைச்சல் இல்லாமல் உடனடியாக சிம் கார்டுகளை பெற்றுக்கொள்ளலாம், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ICA கூறுகையில் சுற்றுலா பயணிகள் இந்த இலவச ப்ரீபெய்ட் சிம் கார்டுகளை மூன்று நிமிட டாக் டைம், 5 SMS மற்றும் 20 MB டேட்டா உடன் UAE இல் எந்த பகுதியில் வேண்டும் என்றாலும் பெற்றுக்கொள்ளலாம், என்று கூறியுள்ளது.

இந்த இலவச சிம் கார்டு சுற்றுலா பயணிகள் அல்லது அமீரகத்திற்கு வருகை தருவோர்க்கு தொடக்கத்தில் 30 நாட்கள் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் அவர்கள் தங்கள் விசாவை நீட்டித்தால் இந்த சிம் கார்டு தானாகவே புதுப்பித்து கொள்ளும்.