UAE Tamil Web

அமீரகத்தில் 100 ஆடுகளை வாங்கி ஏமாற்ற முயன்ற வர்த்தகர்.. 90,000Dh இழந்து தவித்த விவசாயி – சிறப்பான தீர்ப்பு வழங்கிய அல் ஐன் நீதிமன்றம்

அமீரகத்தின் அல் அய்ன் நகரத்தில் உள்ள விவசாயி ஒருவரிடம் இருந்து 100 ஆடுகளை வாங்கிய கால்நடை வியாபாரி ஒருவர் அந்த விவசாயிக்கு 1,00,000 தில்ஹம் கொடுக்க வேண்டிய இடத்தில் வெறும் 10,000 மட்டுமே கொடுத்துள்ளார்.

நீதிமன்ற ஆவணங்களில், அந்த நபர் விவசாயியின் நம்பிக்கையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார் என்றும், மொத்த கொள்முதல் விலையில் வெறும் 10 சதவீதத்தை மட்டுமே செலுத்தி நிலையில் அவர் விலங்குகளை விற்க ஒப்புக்கொண்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த தொழிலதிபர் விவசாயிக்கு மாதாந்திர தவணைகளில் 5,000 திர்ஹம் செலுத்துவதாக உறுதியளித்துள்ளார். ஆனால் அவர் தனது வார்த்தையைக் கடைப்பிடிக்கவில்லை, அந்த விவசாயி பலமுறை கோரிக்கை விடுத்தும் பணத்தை செலுத்த மறுத்துள்ளார் அவர்.

அவருடைய நடத்தையே அந்த விவசாயியை அல் ஐன் நீதிமன்றத்திற்கு செல்ல வழி வகுத்துள்ளது. தனது வழக்கில், விவசாயி தனது 100 ஆடுகளை வாங்கியதற்கான பாக்கித் தொகையான 90,000 திர்ஹம் தர வேண்டும் என்று தொழிலதிபரிடம் கோரியுள்ளார்.

விலங்குகளுக்கான மொத்த விலையான 100,000 திர்ஹங்களில் 10,000 திர்ஹம்களை மட்டுமே வர்த்தகர் செலுத்தியதாகவும் அவர் நீதிமன்றத்தில் கூறினார். இரு தரப்பினரின் வாதத்தை கேட்டபிறகு, அல் ஐன் முதன்மை நீதிமன்றம் அந்த தொழிலதிபர் 90,000 திர்ஹம் செலுத்துமாறு அறிவுறுத்தியது.

மேலும் அந்த விவசாயியின் சட்டச் செலவுகளை தொழிலதிபர் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. எளியோரை ஏமாற்றுவது மிகப்பெரிய தவறு என்பதை அனைவரும் உணரும் வண்ணம் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap