UAE Tamil Web

அபுதாபி சேக் ஜயித் மசூதிக்கு வரும் வழிப்பாட்டாளர்களுக்கு இலவச சேவையை அறிவித்த போக்குவரத்து மையம்

ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்களில் ஷேக் ஜயீத் கிராண்ட் மசூதிக்கு வருபவர்கள் தங்கள் வாகனங்களை நியமிக்கப்பட்ட பார்க்கிங்கில் நிறுத்தவும், பொதுப் பேருந்தில் பயணிக்கவும் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் உள்ள நகராட்சிகள் மற்றும் போக்குவரத்து துறையின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையமான (ITC) ரமலான் மாதத்தில் இறுதி   நாட்களில் வழிப்பாட்டாளர்கள் வழிபட இலகுவாக்கும் வகையில் இந்த இலவச சேவைகள் வழக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

இலவச பேருந்து சேவை இஷா மற்றும் தராவீஹ் தொழுகைக்கு பிறகும் இரவு தொழுகை முடிந்து ஒரு மணி நேரத்திற்கும் இயக்கப்படுகிறது. இந்த பேருந்து சேவையானது வஹாத் அல் கராமா பார்க்கிங் மற்றும் சயீத் ஸ்போர்ட்ஸ் சிட்டி பார்க்கிங்கில் இருந்து நடைபெற்று வருகிறது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap