துபாயின் இரண்டு முக்கிய சாலைகளில் இன்று நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளின் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
துபாயின் ஷேக் முகமது பின் சயீத் சாலையில் ஏற்பட்ட விபத்தினால் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஷார்ஜா செல்லும் வழியில் உள்ள முஹைசினா மேம்பாலத்திற்கு அருகே இந்த விபத்து நேர்ந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அதேபோல இன்று காலை 7.23 மணிக்கு அதே சாலையில் அபுதாபி செல்லும் வழியில் குளோபல் வில்லேஜ்-ற்கு அடுத்து நேர்ந்த விபத்தினால் அப்பகுதியில் வாகனவோட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.
மக்கள் கவனத்துடன் வாகனங்களை இயக்குமாறும் சாலை விதிமுறைகளின்படி வாகனங்களை இயக்கும்படியும் காவல்துறை எச்சரித்துள்ளது.