UAE Tamil Web

இன்று முதல் ட்ரான்சிட் பயணிகளும் அமீரகம் வரலாம்..!

Stock-India-airport-Indigo

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அமீரக அரசால் பயணத் தடை விதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து அமீரக ரெசிடென்சி விசா வைத்திருப்பவர்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் அமீரகம் திரும்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த நாடுகளில் இருந்து அமீரகம் வழியாக வேறு நாடுகளுக்குப் பயணிக்கும் பயணிகளும் (டிரான்ஸிட்) அமீரக விமான விமான நிலையங்களுக்கு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அமீரக அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

டிரான்சிட் பயணிகள் இறுதியாக செல்லும் நாடு அமீரக அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருக்க வேண்டும். அதே போல பயண புறப்பாட்டு நேரத்திலிருந்து 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனை சான்றிதழை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். அமீரக விமான நிலையங்களில் ட்ரான்சிட் பயணிகளுக்காக சிறப்பு ஓய்வு அறைகள் ஒதுக்கப்படும் என ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அபுதாபி மையமாகக் கொண்டு இயங்கும் எதிஹாட் விமான நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் “தற்போதைய சூழலில் வங்கதேசத்தில் இருந்து வரும் டிரான்ஸிட் பயணிகளை மட்டுமே அமீரகத்திற்குள் வர அனுமதிப்பதாகவும் தடைசெய்யப்பட்ட பிற நாடுகளிலிருந்து அமீரகத்திற்கு விமான சேவைகள் துவங்கும் போது, டிரான்சிட் பயணிகளும் அனுமதிக்கப்படுவார்கள்” எனவும் தெரிவித்துள்ளது

Stock-India-airport-Indigo
8 Shares
Share via
Copy link
Powered by Social Snap