UAE Tamil Web

அஜ்மானில் புதிய ஸ்மார்ட் வாடகை காரை அறிமுகப்படுத்திய போக்குவரத்து ஆணையம்

அஜ்மானில் வர்த்தக சேவைகள் கழகம் மற்றும் போக்குவரத்து ஆணையம் இணைந்து ஸ்மார்ட் வாடகை கார் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

அஜ்மானில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சேவையை குடியிருப்பாளர்கள் ஸ்மார்ட் அப்ளிகேஷன் மூலம் வாகனங்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.

இது குறித்து வர்த்தக சேவைகளின் நிர்வாக இயக்குனர் அஹ்மத் சக்ர் அல் மத்ரூஷி, “அஜ்மான் மக்களுக்கு வாகன சேவைகளை விரிவுப்படுத்த போக்குவரத்து ஆணையம ஸ்மார்ட் வாடகை காரை நடைமுறைக்கு அமல்படுத்த உள்ளது.

இந்த ஸ்மார்ட் வாகனத்தில் பயணிகள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் போக்குவரத்தை மேற்கொள்ளலாம். இது குடியிருப்பாளர்களின் தேவையை அவசியம் பூர்த்து செய்ய உதவும்” என்றார்.

மேலும். ஸ்மார்ட் வாடகை கார் சேவையின் மூலம் வர்த்தக சேவைகள் கழகம் மற்றும் போக்குவரத்து ஆணையம் ஒருங்கிணைந்துள்ளதாக மத்ரூஷி தெரிவித்தார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap