UAE Tamil Web

முக்கியச் செய்தி: இவர்கள் மட்டுமே துபாய் விமான நிலையத்திற்கு வரலாம் : ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்-ன் புதிய அறிவிப்பு.!

Dubai-Airport-1

துபாயில் வழங்கப்பட்ட ரெசிடென்சி விசாவை வைத்திருந்து GDRFA விடம் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வர அனுமதிக்கப்படுவார்கள் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

“பிற எமிரேட்களில் வழங்கப்பட்ட ரெசிடென்சி விசாவை வைத்திருப்பவர்கள் துபாய் விமான நிலையத்திற்கு வர அனுமதிக்கப்படமாட்டார்கள். ராஸ் அல் கைமா, அபுதாபி, ஷார்ஜா ஆகிய எமிரேட்களின் விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் கண்டிப்பாக அமீரக அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையத்திடம் (ICA) அனுமதி பெற்றிருத்தல் வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவல்கள் அனைத்தும் தங்களுடைய நிபந்தனைகள் அல்ல எனவும் துபாய் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவை சுட்டப்பட்டுள்ளதாகவும் ஏர் இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.

Dubai-Airport-1
5 Shares
Share via
Copy link