UAE Tamil Web

பையில என்ன..? அதெல்லாம் அரிய மூலிகை.. சார் – துபாய் விமான நிலையத்தில் 1.6 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்ட போதை ஆசாமி..!

Dubai Airports turns 60

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இன்று 1.6 கிலோ மரிஜுவானாவுடன் பிடிபட்ட நபரை காவல்துறை கைது செய்திருக்கிறது.

விசிட்டிங் விசாவில் அமீரகம் வந்த மர்ம ஆசாமியின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதித்த போதும் அதில் ஒன்றும் சிக்கவில்லை. இருப்பினும் அவரது கையில் இருந்த சிறிய பையினை ஆராய்ந்ததில் உள்ளே போதைப்பொருள் இருப்பது தெரியவந்திருக்கிறது.

அவை மூலிகை எனவும் தனது நாட்டில் விமானம் ஏறுவதற்கு முன்னர் ஒருவர் இந்தப் பையை தம்மிடம் கொடுத்ததாகவும் துபாயில் அவரது நண்பர் ஒருவரிடத்தில் இதனை ஒப்படைக்குமாறும் தெரிவித்ததாக பயணி காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அவர் சுங்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு துபாய் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். மூலிகை என நினைத்து கஞ்சா கடத்திவந்த ஆசாமி மீது இப்போது துபாய் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

Dubai Airports turns 60
2 Shares
Share via
Copy link