இந்தியாவிலிருந்து அபுதாபி திரும்பும் அமீரக விசா (ரெசிடென்சி, டூரிஸ்ட், விசிட் உட்பட அனைத்தும்) வைத்திருப்பவர்களுக்கான புதிய விதிமுறைகளை இந்தியாவின் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி,
அமீரகத்தின் பிற எமிரேட்களில் வழங்கப்பட்ட விசாவை வைத்திருப்பவர்களும் அபுதாபிக்கு வரலாம்.
பயணிகள் பின்பற்றவேண்டிய விதிமுறைகள்:
ICA வின் இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும். பின்னர் ICA ஸ்மார்ட் ரிஜிஸ்ட்ரேஷேன் இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.
அமீரகத்திற்கு வருவதற்கு முன்னர் தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
பயண நேரத்திற்கு 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட PCR நெகட்டிவ் சான்றிதழை வைத்திருக்கவேண்டும். பரிசோதனையானது அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் எடுக்கப்பட வேண்டும். மேலும் சான்றிதழில் QR Code இடம்பெறுதல் வேண்டும்.
விமானம் ஏறுவதற்கு முன்னர், ரேபிட் கொரோனா பரிசோதனையை எடுத்துக்கொள்ள வேண்டும்.
வருகையின்போது PCR பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக்கொள்ள வேண்டும்.
அமீரகம் வந்ததற்குப் பிறகு 4 & 8 ஆம் நாளில் மீண்டும் PCR பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.
தடுப்பூசி எடுக்காதவர்கள் நிறுவன அல்லது வீட்டு தனிமைப்படுத்தலில் இருத்தல் வேண்டும். அவர்கள் தங்களது கைகளில் மெடிக்கல் கண்காணிப்புப் பட்டையை அணிதல் வேண்டும். குவாரண்டைனின் 9 வது நாள் மீண்டும் கொரோனா பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.
16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு இந்த நடைமுறையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.