UAE Tamil Web

இந்தியாவிலிருந்து துபாய் வருபவர்கள் கவனத்திற்கு: இந்தியாவில் நீங்கள் எங்கே PCR டெஸ்ட் எடுக்கவேண்டும்..?

Stock-Dubai-airport-

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சிக்கிக்கொண்ட செல்லுபடியாகும் ரெசிடென்சி விசா வைத்திருப்பவர்கள் ஆகஸ்டு 5 ஆம் தேதிமுதல் அமீரகம் திரும்ப அமீரக அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் அனுமதியளித்தது.

இதனையடுத்து, அமீரகம் திரும்புபவர்களுக்கான பல்வேறு விதிமுறைகளை அமீரக அரசு வெளியிட்டது. அதில், PCR டெஸ்ட்டும் ஒன்றாகும். அதாவது தங்களுடைய பயண நேரத்திற்கு முன்னதாக 48 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை பயணி சமர்ப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட மையத்தில் எடுக்கப்படும் இந்த பரிசோதனையின் சான்றிதழில் QR Code இடம்பெற்றிருக்க வேண்டும்.

இதனையடுத்து, பல இந்தியர்கள் எங்கே PCR பரிசோதனை எடுக்க வேண்டும்? என குழப்பத்தில் தவித்துவந்தனர். இந்நிலையில், இந்தியாவில் இருந்து துபாய் திரும்புபவர்கள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மெடிக்கல் கவுன்சிலால் (ICMR) அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை மையங்களில் மட்டுமே கொரோனா பரிசோதனையை எடுத்திருக்க வேண்டும் எனத் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது

ICMR ஆல் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை மையங்களின் பட்டியலைக் காண இங்கே கிளிக் செய்யவும்.

துபாயை மையமாகக்கொண்டு இயங்கும் எமிரேட்ஸ் நிறுவனமும் பயணிகள் எங்கே PCR பரிசோதனையை எடுக்க வேண்டும் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ICMR ஆல் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை மையங்களில் பரிசோதனையை மக்கள் மேற்கொள்ளலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பட்டியலைக் காண இங்கே கிளிக் செய்யவும்.

இதுகுறித்து ஃபிளை துபாய் வெளியிட்ட பட்டியலைக் காண இங்கே கிளிக் செய்யவும்.

துபாய் வரும் பயணிகள் பின்பற்றவேண்டியவை

  • GDRFA ஒப்புதல்
  • தடுப்பூசி பெற்றுக்கொண்டதற்கான சான்றிதழ்
  • பயணத்திற்கு 48 மணிநேரத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட PCR பரிசோதனை சான்றிதழ்.
  • பயண நேரத்திற்கு 4 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் (ரேபிட் ஆன்டிஜன் டெஸ்ட்டிற்கு அனுமதியில்லை)
  • துபாய் வந்தடைந்த பின்னர் PCR பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும்.
Stock-Dubai-airport-
10 Shares
Share via
Copy link