UAE Tamil Web

மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்று வீசும்; மணற்புயல் காரணமாக மஞ்சள் எச்சரிக்கையை விடுத்த வானிலை ஆய்வுமையம்..!

STORM

ஷஹீன் புயல் ஓமானில் கரையைக் கடந்துவிட்டாலும் அமீரக வானிலையில் அதனால் தாக்கம் இன்று நீடிக்கும் என தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்றானது வீசும் எனவும் மணற்புயல் உருவாகும் வாய்ப்பு அதிகமிருப்பதால் வாகனவோட்டிகள் மிக கவனமாக செயல்படும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல் அய்னின் கேஸ்யோரா பகுதியில் மணற்காற்று வீசுவதால் 500 மீட்டருக்கு அப்பால் உள்ளவை தெரிவதில் சிரமம் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளுக்கு மணற்காற்று காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 3 மணிவரையில் அதிவேகக் காற்று மற்றும் தூசுப் புயல் வீசும் என NCM தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அல் அய்ன், துபாயின் ஹட்டா, துபாய் – அல் அய்ன் சாலை மற்றும் அஜ்மனின் முசைரா ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்ததாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

STORM
5 Shares
Share via
Copy link