UAE Tamil Web

ஷார்ஜா: காய்கறி ஏற்றிச்சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து – ஸ்தம்பித்த போக்குவரத்து..!

fruit-truck-crash-sharjah-24-nov-2021-

ஷார்ஜாவின் கார்னிச் பகுதியில் நேற்று காய்கறி ஏற்றிய ட்ரக் ஓவர் டர்ன் எடுக்ககையில் கவிழ்ந்திருக்கிறது. இதன் காரணமாக அவ்வாகனத்தில் இருந்த காய்கறிகள் அனைத்தும் சாலையில் உருண்டோடின.

இதனால் அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. அதிக வேகத்துடன் ட்ரக்கை ஓட்டிவந்த ஆசிய நாட்டைச் சேர்ந்த ட்ரைவரால் ரவுண்டானாவில் வாகனத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போயிருக்கிறது. அதுவே விபத்திற்குக் காரணம் என காவல்துறை தெரிவித்திருக்கிறது.

காயங்களுடன் உயிர்தப்பிய டிரைவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறது ஆம்புலன்ஸ். போக்குவரத்தை சீரமைக்கும் பணி இரவு முழுவதும் நடைபெற்றிருக்கிறது.

வாகனவோட்டிகள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

fruit-truck-crash-sharjah-24-nov-2021-
0 Shares
Share via
Copy link