ஈத் அல் பித்ர் பெருநாளை முன்னிட்டு அபுதாபி மற்றும் அல் அய்ன் சாலைகளில் 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் லாரிகளுக்கு தடை விதிக்கப்படும் என அபுதாபி காவல்துறை அறிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் தேதி திங்கட்கிழமை அதிகாலை 1 மணி முதல் மதியம் வரை போக்குவரத்து சீராக இருக்கவும், புனித மாதத்தில் கனரக வாகனங்களால் ஏற்படும் விபத்துகளை குறைக்கவும் இந்த தடை அமல்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபுதாபியின் நுழைவாயில்கள், ஷேக் ஜயீத் பாலம், ஷேக் கலீஃபா பாலம், முசாபா பாலம் மற்றும் அல்-மக்தா பாலம் உட்பட அபுதாபியின் அனைத்து சாலைகள் மற்றும் தெருக்களிலும் கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் இயக்கத்தை தடை விதிக்கப்பட்டுள்ளது.