34.3 C
Dubai
July 14, 2020
UAE Tamil Web

அபுதாபி : நெரிசலான நேரங்களில் கனரக டிரக்குகள் இயங்க தடை!

Truck

அபுதாபி : ஞாயிற்றுக்கிழமை முதல் கனரக டிரக்குகள் (heavy goods trucks) அபுதாபியின் சாலைகளில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அபுதாபி நகரத்தில் காலை 6.30 மணி முதல் 9 வரையிலும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையில் கனரக டிரக்குகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அல் அய்ன் பகுதியில் இந்த கனரக டிரக்குகள் காலை 6.30 முதல் 8.30 மணி வரையிலும், பிற்பகலில் 2 மணி முதல் 4 மணி வரையிலும் இயங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிற எமிரேட்களில் இருந்து அபுதாபிக்குள் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடை நடைமுறையில் இருப்பினும், அபுதாபிக்கு உட்பட்ட பகுதிகளுக்குள் அபுதாபி குடியிருப்பாளர்கள் தடையில்லாமல் பயணிக்கலாம்.

அதே வேளையில், மக்கள் அபுதாபியை விட்டு வெளியே செல்ல சிறப்பு அனுமதி பெறத் தேவையில்லை. மேலும், பிற எமிரேட்டிலிருந்து அபுதாபிக்குள் பயணிக்க சில முக்கியமான துறைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க.!