காக்கை குருவி எங்கள் சாதி .. நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்.. என்றான் பெரும்புலவன் பாரதி. உலகத்து உயிர்களெல்லாம் தன்னுயிர்போலக் கருதிடும் மனம் அனைவருக்கும் இருந்தாலும் எல்லா நேரமும் அவை வெளிப்படுவதில்லை. அப்படி வெளிப்படுமாயின் அவரே இந்த உலகத்தின் தலை சிறந்த குடிமகன்.
சில நாட்களுக்கு முன்னர் பரபரப்பான தேராவின் கடையொன்றின் வெளியே இருந்த மேற்கூரையில் பறவை ஒன்று சிக்கிக்கொண்டது. சுற்றி இருந்த அனைவரும் பறவையை பரிதாபமாகப் பார்க்க அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் துணிச்சலாக செயல்பட்டு பறவையை மீட்டிருக்கிறார்.
சுமார் 15 அடி உயரத்தில் சிக்கியிருந்த பறவையை மீட்கும் வழியை யோசித்த அந்நபர், அங்கிருந்த ஏணி ஒன்றினைத் தூக்கிவந்து, அதன் மீது ஏறி பறவையை பத்திரமாக விடுவித்தார்.
இடரிலிந்து வெளிவந்த பறவை அவரது கையை விட்டு சந்தோஷச் சிறகடித்தது , அங்கு நின்ற அனைவரையும் சில வினாடிகளேனும் பறவையாகிவிட்டது.
