UAE Tamil Web

அபுதாபியில் நடந்த கோர தீ விபத்து.. ஒரு இந்தியர் உள்பட இரு வெளிநாட்டவர்கள் பலி – 120 பேர் சிறு காயங்களுடன் மீட்பு

கடந்த திங்கள்கிழமை அபுதாபி நகரில் உள்ள உணவகத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒரு இந்தியர் மற்றும் ஒரு பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் பலியானது நாடு முழுவதும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமீரகத்தில் செயல்படும் இந்திய மற்றும் பாகிஸ்தான் நாட்டு தூதரகங்கள் இந்த செய்தியை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காலிதியா பகுதியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் மதிய உணவு வேளையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் இருவர் உயிரிழந்தனர். அதுமட்டுமல்லாமல் 120 பேர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர். இதில் 64 பேருக்கு லேசான காயமும், 56 பேருக்கு சிறிய அளவிலான காயமும் ஏற்பட்டுள்ளது.

அபுதாபி காவல்துறையினர், “இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தங்களுடைய அனுதாபத்தையும்” தெரிவித்துள்ளனர்.

கலிதியா மால் மற்றும் ஷைனிங் டவர் அருகே உள்ள பகுதி, பல குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் உணவகங்கள் அதிகம் உள்ள இடம். ஆகவே இங்கு மக்கள் கூட்டம் பொதுவாகவே அதிகமாக இருக்கும் என்பதால்த் தான் அதிக அளவிலான மக்கள் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து நடந்த பகுதிக்கு அருகாமையில் உள்ள இடத்தில் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். மீதமுள்ளவர்கள் அரபு நாடுகள் மற்றும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap