அஜ்மானில் பணத்திற்காக சூனியம் செய்த குற்றச்சாட்டில் அரபு நாட்டைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அஜ்மான், சிஐடியின் இயக்குநர் லெப்டினன்ட் கேணல் அஹ்மத் சயீத் அல்-நுஐமி, சந்தேக நபர்கள் இருவரின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகத் தெரிவித்தார்.
அஜ்மான் போலீசார் இந்த தகவலை உறுதி செய்து, சிஐடி அதிகாரிகள் குழுவை அமைத்து சந்தேகமிக்க நபர்களை சூனியம் செய்வதற்கு தேவையான பொருட்களுடன் பிடித்து விசாரித்தனர். அப்போது இருவரும் 10 ஆயிரம் திர்ஹம்ஸ் பணத்துக்காக சூனியம் செய்ததாக ஒப்புக்கொண்டனர்.
இந்நிலையில் சூனியம் செய்த வழக்கில் அரபு நாடுகளைச் சேர்ந்த இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.