ஷார்ஜாவின் அல் பராஷி பகுதியில் இருந்து லாரி மற்றும் உபகரண பொருட்களை திருடிய இருவரை ஷார்ஜா போலீஸ் ஜெனரல் கமாண்டில் உள்ள குற்றப் புலனாய்வு மற்றும் புலனாய்வுத் துறையினர் கைது செய்துள்ளனர்.
ஷார்ஜா காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் கர்னல் உமர் அபு அல் ஜூட் தெரிவிக்கையில், ” உடனே திருடப்பட்ட இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை சோதனையிட்டதில், திருட்டு நடந்திருப்பது பதிவாகியுள்ளது. பின்னர் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு இரண்டு மணி நேரத்திற்குள் திருடர்கள் கைது செய்யப்பட்டனர்” என்றார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட தீவிர முயற்சிகளின் காரணமாக இரண்டு திருடர்களையும் விரைவாக அடையாளம் கண்டு கைது செய்யப்பட்டதாக உமர் அபு அல் ஜூட் கூறினார்.
மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணையும் நடைபெற்று வருகின்றன.