UAE Tamil Web

துபாய்: 2 நாட்கள் இலவச பார்க்கிங் ; மெட்ரோ இயங்கும் நேரத்தில் மாற்றம் – RTA வெளியிட்ட அறிவிப்பு..!

Stock-RTA-parking-meter-Dubai

அமீரகத்தில் ஆகஸ்டு 12 ஆம் தேதி ஹிஜிரி புத்தாண்டு கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு துபாயில் ஆகஸ்டு 12, 13 ஆகிய தேதிகளில் இலவச பார்க்கிங் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது.

மல்டி லெவல் பார்க்கிங் இடங்களைத் தவிர பொது பார்க்கிங் இடங்களில் மக்கள் வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் தங்களது வாகனங்களைக் கட்டணமின்றி நிறுத்திக்கொள்ளலாம். மீண்டும் சனிக்கிழமை முதல் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ இயங்கும் நேரத்திலும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி,

வியாழக்கிழமை : துபாய் மெட்ரோவின் ரெட் மற்றும் கிரீன் லைன்களில் காலை 5 மனிமுதல் அடுத்தநாள் காலை 1 மணிவரையிலும் ரயில்கள் இயக்கப்படும்.

வியாழக்கிழமை : டிராம் சேவை காலை 6 மணிமுதல் அடுத்தநாள் அதிகாலை 1 மணிவரையிலும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை நாட்களில் மக்கள் அனைவரும் சுகாதார விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்கவேண்டும் என துபாய் நகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

Stock-RTA-parking-meter-Dubai
0 Shares
Share via
Copy link