37.4 C
Dubai
August 10, 2020
UAE Tamil Web

துபாயில் இன்று நிகழ்ந்த மோசமான சாலை விபத்தில் 2 பேர் பலி, 5 பேர் படுகாயம்..!

Two-dead--five-injured-in-Dubai-traffic-accident-

துபாயில் உள்ள ஷேக் முகமது பின் சயீத் சாலையில் (Sheikh Mohammed Bin Zayed Road) இன்று அதிகாலை கழிவுப்பொருளை ஏற்றிச்சென்ற லாரியும், பேருந்தும் மோதிக்கொண்டதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயம் அடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 4.30 மணிக்கு, சாலையின் மையத்தில் நின்றுகொண்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் லாரி மோதியதால் இந்த கோர விபத்து நிகழ்ந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

துபாயில் உள்ள அல் குசைஸ் பகுதியில் பஞ்சரான நிலையில் பேருந்தை சாலையில் மையத்திலேயே ஓட்டுனர் நிறுத்தியிருந்தது தான் இந்த விபத்திற்கு காரணமாகும்.

கழிவுப்பொருள் ஏற்றிச்சென்ற லாரியில் இருந்த ஆசியாவைச் சேர்ந்த இரண்டு பேர் மரணத்துவிட்டதாகவும் பேருந்தில் இருந்த 5 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

விபத்து குறித்து தகவல் கிடைத்த உடனேயே சம்பவ இடத்திற்கு அவசர சேவைப் பிரிவுகள் விரைந்தன. காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பியதுடன் விபத்து நிகழ்ந்த இடத்தை சரிசெய்யும் வரையில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சூழலை சமாளித்தார்கள் அவசரப் பிரிவு பணியாளர்கள்.

இதையும் படிங்க.!