UAE Tamil Web

துபாய் தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம் – பராமரிப்புப் பணியின்போது மின்சாரம் பாய்ந்து பலி!

துபாயில் குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்ட 2 தொழிலாளர்கள் நீரில் மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே பலியாயினர். துபாயில் உள்ள குளம் ஒன்றை தூர்வாருவதற்காக 2 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குளத்தில் நீர் இரைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மின் மோட்டார் முறையாக பராமரிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் எதிர்பாரதவிதமாக மின் வயர் நீரில் விழுந்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக குளத்தில் பரமாரிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 2 தொழிலாளர்கள் மீது மின்சாரம் பாய்ந்ததில் இருவருமே சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். தகவலறிந்து சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மரணத்திற்கான காரணம் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. தொழிலாளர்களின் விவரங்களை வெளியிட மறுத்த அதிகாரிகள் அவர்கள் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிட்டுள்ளனர். பராமரிப்புப் பணிகளுக்கு அங்கீகாரம் பெற்ற கம்பெனிகளை மட்டுமே அனுக வேண்டும் என துபாய் காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தொழிலாளர்கள் பணியின்போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

4 Shares
Share via
Copy link