UAE Tamil Web

அமீரகத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இருவருக்கு ஆயுள் தண்டனை

அமீரகத்தில் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இரண்டு வெளிநாட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வீட்டுப் பணிப்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதற்காக ஆசிய நாட்டைச் சேர்ந்த 38 வயதான ஆணுக்கும் 36 வயதான பெண்ணுக்கும் அஜ்மான் குற்றவியல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

அஜ்மான், அல் நுஐமியா இரண்டாவது மாடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழிலால் பாதிக்கப்பட்ட பெண், தனது தோழியுடன் தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்தார்.

இதனால் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டது, மற்றோருவர் முதல் மாடியில் உள்ள பால்கனியில் விழுந்ததால் லேசான காயம் ஏற்பட்டது.  இதனை அடுத்து சப்தம் எழுப்பிய அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர்கள், காவல்துறையை அழைத்து படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

வேலை வாங்கித் தருவதாக கூறி வேறொரு எமிரேட்டில் இருந்து அஜ்மானுக்குக் கொண்டு சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்திய குற்றவாளிகளை போலீஸ் கைது செய்தது.

பாதிக்கப்படவர்களுக்கு தங்குமிடம் வழங்கி வெளியே செல்ல தடை விதித்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளனர்.

இது குறித்து நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட ஆசிய நாட்டுப் பெண் கூறியதாவது, “நான் பணிப்பெண்ணாக வேலை செய்து கொண்டிருந்தேன், எனக்கு விசா பெற்றுத்தந்தவர்களிடம் இருந்து தப்பி ஓடிவந்தேன், பின்னர் தான் இந்த இருவர்களையும் அறிந்தேன், இவர்கள் என்னை அஜ்மானில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து வந்தனர். என்னை ஒரு நிறுவனத்தில் துப்புரவு வேலை பெற்றுத்தருவதாக கூறினர். ஆனால் என்னை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு, வெளியேறவிடாமல் தடுத்தனர்.

தற்போதைய கோவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, பாலியல் தொழிலை தவிர வேறு எந்த வேலையும் இல்லை, மூன்று வாரங்கள் என்னை பாலியல் தொழில் செய்ய கட்டாயப்படுத்தினர். இதனால் தான் வேறோரு பெண்ணுடன் தப்பிச் செல்ல திட்டமிட்டேன்” என்று பாதிக்கப்பட்ட பெண் கூறினார்.

1 Share
Share via
Copy link