ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அபுதாபி மீது இரண்டு ஏவுகணைகளை வீசி தாக்க முயற்சித்ததாகவும், அவற்றை இடைமறித்து அழித்ததாகவும் அமீரகம் தெரிவித்து உள்ளது.
மத்திய கிழக்கு நாடான ஏமனில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில், கடந்த 6 ஆண்டுகளாக அரசுக்கு ஆதரவாகவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகவும் சவுதி தலைமையிலான கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதற்கிடையே கடந்த 17 ஆம் தேதி அபுதாபி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர். இதனால் சவுதி தலைமையிலான படை, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது.
MOD Joint Operations Command announces that at 04:10 hrs Yemen time an F-16 destroyed a ballistic missile launcher in Al Jawf, immediately after it launched two ballistic missiles at Abu Dhabi. They were successfully intercepted by our air defence systems. Video attached. pic.twitter.com/laFEq3qqLm
— وزارة الدفاع |MOD UAE (@modgovae) January 24, 2022
இதனையடுத்து, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலின் இரண்டு ஏவுகணைகளை 1,400 கிமீ தொலைவில் உள்ள அல் ஜாஃப் என்ற இடத்தில் அமீரகத்தின் F-16 ஜெட் விமானங்கள் வானிலேயே இடைமறித்து தாக்கி அழித்ததாக அமீரக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று அபுதாபி நோக்கி செலுத்திய சிறிது நேரத்தில் அதிகாலை 4.10 மணிக்கு இந்த எதிர்தாக்குதல் நடந்ததுள்ளது. மேலும் ஏவுகணைகளின் பாகங்கள் அபுதாபியில் விழுந்திருப்பதாகவும் தெரிவித்தது.
தாக்குதலுக்கு எதிராக தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்துவதால் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.