துபாயில் வசிக்கும் இரு இந்தியர்களுக்கு தற்போது ஒரு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது, ராகுல் ரமணன் மற்றும் ஜேக்கப் ஆகிய இருவருக்கும் Dubai Duty Free Millennium Millionaire போட்டியில் ஆன்லைன் மூலம் கலந்துகொண்டதில் தலா 1 மில்லியன் டாலர் பரிசு கிடைத்துள்ளது.
அமீரகத்தில் வசிக்கும் இந்தியரான ராகுல் ரமணன், ஏப்ரல் 30 அன்று ஆன்லைனில் அந்த அதிர்ஷ்ட டிக்கெட்டை (எண் 0595) வாங்கிய நிலையில் தற்போது மில்லினியம் மில்லியனர் சீரிஸ் 389ல் அவருக்கு $1 மில்லியன் தொகையை கிடைத்துள்ளது.
அதே போல அபுதாபியில் வசிக்கும் 47 வயதான ஜான்சன் ஜேக்கப், கடந்த மே 13 அன்று ஆன்லைனில் வாங்கிய டிக்கெட் எண் 4059 மூலம், Millennium Millionaire Series 390ல் $1 மில்லியன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். Dubai Duty Free போட்டியில் கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து பங்கேற்பவர் ஜேக்கப் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜேக்கப் டிக்கெட் கட்டணத்தை தனது குடும்ப நண்பர் ஒருவருடன் பகிர்ந்து கொண்டார், சுமார் 16 ஆண்டுகளாக அபுதாபியில் வசிக்கும் ஜேக்கப் மூன்று குழந்தைகளுக்கு தந்தை ஆவர். அவர் ஒரு நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகின்றார்.
ரமணன் மற்றும் ஜேக்கப் ஆகியோர் இருவரும் இந்த Dubai Duty Free பரிசை வெல்லும் 189வது மற்றும் 190வது இந்திய பிரஜைகள் ஆவர். 1999 இல் மில்லினியம் மில்லினியம் ப்ரோமோஷன் தொடங்கியதில் இருந்து இதுவரை 190 இந்தியர்கள் $1 மில்லியன் வென்றுள்ளனர்.
துபாயில் டூட்டி ஃப்ரீ மில்லினியம் மில்லியனர் டிக்கெட் வாங்குபவர்களில் இந்தியர்கள் தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.