UAE Tamil Web

பரிசா? எனக்கா?: வாழ்க்கையை மாற்றிய ஒரு போன்கால்..! – துபாய் டியூட்டி ஃப்ரீயில் 10 லட்சம் டாலரை வென்ற இந்தியர்..!

The-winning-tickets-being-drawn_

துபாய் டியூட்டி ஃப்ரீயின் மில்லினியம் மில்லியனர் மற்றும் ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் டிரா நேற்று நடைபெற்றன. இதில் இரண்டு இந்தியர்கள் 10 லட்சம் டாலர்களை வென்றுள்ளனர்.

பரிசா? எனக்கா?

அப்படித்தான் கேட்டிருக்கிறார் பெங்களூரைச் சேர்ந்த அமித். 46 வயதான இவர் பெங்களூரில் கணினி நிலையம் ஒன்றினை நடத்திவருகிறார். பங்குச்சந்தையிலும் ஈடுபட்டுவரும் அமித், கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி 348 சீரிஸில் டிக்கெட்டை வாங்கியிருக்கிறார்.

“நம்புவதற்குக் கடினமாக இருந்தாலும் நான் வெற்றிபெற்றிருக்கிறேன் என்பது எனக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த பணத்தைக் கொண்டு என் தொழிலை விருத்தி செய்வேன். குறிப்பிட்ட அளவு பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் எண்ணம் இருக்கிறது. முக்கியமாக அரசு சாரா அமைப்பு (NGO) ஒன்றினை நிறுவி அதன்மூலம் கஷ்டப்படுபவர்களுக்கு உதவுவேன்” என அமித் தெரிவித்தார்.

2016 ஆம் ஆண்டு முதல் DDF ல் பங்கேற்றுவரும் அமித், இந்த முறை DDFன் ஆண்டுவிழா கொண்டாட்டத்தின் போது 25% தள்ளுபடியில் தனது அதிர்ஷ்ட டிக்கெட்டை வாங்கியிருக்கிறார்.

இரண்டாவது மில்லியனர்

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் வசித்துவரும் பெங்களூரைச் சேர்ந்த வருண் பூஸ்னர் தான் அந்த இரண்டாவது அதிர்ஷடசாலி மில்லியனர். 2011 ஆம் ஆண்டுமுதல் அமெரிக்காவில் வசித்துவரும் இவர், கடந்த ஓராண்டாக DDF ல் பங்கேற்றுவருகிறார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புரோகிராம் மேனஜராகப் பணிபுரிந்த இவரது தந்தையின் நெடுநாள் விருப்பமான ஏழைக் குழந்தைகளுக்கு கல்வியும், குடியிருப்பு வசதியும் வழங்க வேண்டும் என்பதை, தான் நிறைவேற்ற இருப்பதாக வருண் தெரிவித்தார். பரிசுத்தொகையின் குறிப்பிட்ட தொகையை தனது தொழிலும் முதலீடு செய்யவிருப்பதாக வருண் குறிப்பிட்டார்.

மில்லினியம் மில்லியனர் டிராவைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் டிராவில் ஒரு கார் மற்றும் இரண்டு மோட்டார் பைக்குகளுக்கான அதிர்ஷ்டசாலி நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

காரை வென்ற 3 வயதுக் குழந்தை

அமீரகத்தில் வசித்துவரும் அமெரிக்காவைச் சேர்ந்த ஸயா ஷேக்கிற்கு மூன்று வயதே ஆகின்றன. தனது மகளின் பெயரில் 1766 சீரிஸில் டிக்கெட் வாங்கிய குழந்தையின் தாய் அனிகா ஜஹான் – சவுத்ரி தற்போது Mercedes Benz GLS 580 4M (Selenite Grey) காருக்கு அதிபதி ஆகியிருக்கிறார்.

துபாயில் அழகுசாதனப் பொருட்கள் விற்பனை நிலையத்தினை நடத்திவரும் அனிகா இதுகுறித்துப் பேசுகையில்,” எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. உலகத்தின் உச்சியில் மிதப்பது போல் உணர்கிறேன்” என்றார்.

மோட்டார் பைக்குகள்

இந்தியாவைச் சேர்ந்த நிஸார் நிசு (33) BMW F750GS (Black/Yellow) பைக்கை தட்டிச் சென்றார். கடந்த 13 வருடங்களாக அபுதாபியில் வசித்துவரும் இவர் அல் ஜாபர் அலுமினியப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் நிர்வாக உதவியாளராகப் பணிபுரிந்துவருகிறார். கடந்த ஜனவரி 7 ஆம் தேதி, 439 சீரிஸில் டிக்கெட்டை வாங்கியிருக்கிறார் நிஸார். இப்போட்டியில் இவர் பங்கேற்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 14 வருடங்களாக துபாயில் வசித்து வருபவரும், அல் மசூம் டெக்னிக்கல் சர்வீஸ் நிறுவன உரிமையாளருமான ஜாகிர் அப்பாஸ் Aprilia Tuono Factory (Nero Opaca) பைக்கை பரிசாக வென்றார். கொரோனா காலத்தில் தொழிலில் கடுமையான நஷ்டத்தை சந்தித்ததாகவும், தற்போது கடன் வாங்கியே இந்த டிக்கெட்டை வாங்கியதாகவும் ஜாகிர் தெரிவித்தார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஜாஹிருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. DDF நிகழ்ச்சியை நேரலையில் பார்த்த இவர் தனது வெற்றி குறித்து அறிவிக்கப்பட்டவுடன் துள்ளிக்குதித்திருக்கிறார். இப்படி ஒரு பரிசு கிடைத்தால் வேறென்ன தான் செய்யத் தோன்றும்?

The-winning-tickets-being-drawn_
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap