ஷார்ஜாவின் பாலைவனத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய மூவரை தேசிய தேடல் மற்றும் மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர்.
ஷார்ஜாவின் அல் மடம் பகுதியின் பாலைவனத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் அமீரகத்தைச் சேர்ந்த இருவரும், எகிப்து நாட்டைச் சேர்ந்த ஒருவரும் படுகாயம் அடைந்துள்ளதாக ஷார்ஜா காவல்துறையின் செயல்பாட்டு அறையிக்கு தகவல் கிடைத்துள்ளது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தேடுதல் மற்றும் மீட்பு குழு, ஷார்ஜா காவல்துறை மற்றும் தேசிய ஆம்புலன்ஸுடன் இணைந்து விமானத்தின் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு, தேவையான சிகிச்சைக்காக ஷார்ஜாவில் உள்ள அல் தைத் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.