UAE Tamil Web

உலக நாடுகளுக்கு தண்ணி காட்டிய மாஃபியா மன்னனை ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிய துபாய் போலீஸ்..!

dubai police

உலக நாடுகள் பலவற்றால் தேடப்பட்டுவந்த இத்தாலியைச் சேர்ந்த ரஃபேலி இம்பீரியாலி (Raffaele Imperiale) மற்றும் அவரது வலது கரமாகச் செயல்பட்டு வந்த ரஃபேலி மௌரியேல்லோ (Raffaele Mauriello) ஆகிய இருவரையும் துபாய் காவல்துறை சமீபத்தில் கைது செய்திருக்கிறது.

ஆள் கடத்தல், ஆயுதக் கடத்தல், கொள்ளை, போதைப்பொருள் விற்பனை என கொடிகட்டிப் பரந்த இம்பீரியாலி மற்றும் மௌரியேல்லோவை இத்தாலி அரசு தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலில் வைத்துள்ளது.

உரிமம் பெறாத துப்பாக்கிகளின் மூலமாக கொலைகளை செய்திருக்கும் இருவர் மீதும் இத்தாலி அரசு இன்டெர்போலுடன் இணைந்து சிவப்பு நோட்டீஸ் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இருவரையும் ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிய துபாய் காவல்துறைக்கு பல்வேறு தரப்பிலும் நன்றி தெரிவிக்கப்பட்டுவருகிறது.

dubai police
4 Shares
Share via
Copy link