அபுதாபி சாலையில் அல் ஐன் நோக்கி இருக்கும் ரமா பகுதியில் பேருந்தும் வாகனமும் பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஆசிய நாட்டைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர், மேலும் 11 பேர் காயமடைந்துள்ளதாக அபுதாபி காவல்துறை தெரிவித்துள்ளது.
அல் ஐனில் உள்ள போக்குவரத்து துறையின் துணை இயக்குனர் லெப்டினன்ட் கர்னல் சைஃப் நயிஃப் அல் அமரி கூறுகையில், வேகம், திடீர் பாதை மாற்றம், கவனக்குறைவு காரணங்களால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்து குறித்து அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை மற்றும் அபுதாபி சிவில் டிஃபென்ஸ் படையினர், காயமடைந்தவர்கள் அனைவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில் அல் ஐனில் உள்ள போக்குவரத்து போலீசார், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொண்டனர். திடீரென பாதையை மாற்றுவது குற்றம். மேலும் அது பயங்கரமான விபத்துகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்தனர்.
வாகன ஓட்டிகள் கவனம் செல்லவும், வேகமாகச் செல்வதைத் தவிர்க்கவும், வாகனங்களுக்கு இடையே போதுமான தூரத்தை கடைப்பிடிக்கவும், பாதைகளை மாற்றும்போது இண்டிகேட்ட்ர்களை பயன்படுத்தவும் டிரைவர்களுக்கு வலியுறுத்தப்படு உள்ளது.
