UAE Tamil Web

என்ன.. அந்த இடம் மட்டும் வித்தியாசமா இருக்கு..? – 2.5 லட்சம் மதிப்பிலான நகைகளை வித்தியாசமான முறையில் அபேஸ் செய்த பணிப்பெண்கள்..!

Gold--jewellery--gold-ornaments

துபாயில் அரபு பெண் ஒருவரின் வீட்டில் பணிபுரிந்துவந்த இரு பணிப்பெண்கள் தங்களது முதலாளியின் 2.5 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடிய வழக்கு இன்று துபாய் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வெளிநாடுகளில் இருந்து பணிக்காக வந்த இந்த பணிப்பெண்கள், வீட்டு உரிமையாளர் வைத்திருந்த நகைகளை தங்களது கீழாடையின் ரகசிய பாக்கெட்டில் மறைத்து வைத்திருக்கிறார்கள்.

அன்று வழக்கம்போல தனது நகைகளை எடுத்துவருமாறு மகனிடம் வீட்டு உரிமையாளர் கூற, அவரும் நகைப்பெட்டியைத் திறந்திருக்கிறார். உள்ளே காற்றைத்தவிர ஏதுமில்லை எனத் தெரிந்ததும் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக பணிப்பெண்களின் அறைகளுக்குச் சென்று சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது பணிப்பெண் ஒருவரின் கீழாடை வழக்கத்திற்கு மாறாக அதிக எடையுடன் இருப்பது அவரை சந்தேகத்திற்குள்ளாக்கியிருக்கிறது. கத்தி கொண்டு கிழித்து பார்த்திருக்கிறார் அவர். அப்போது ரகசிய பாக்கெட்டுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நகைகள் வெளியே எட்டிப் பார்த்திருக்கின்றன.

உடனடியாக இதுகுறித்து காவல்துறையிடம் அவர் புகாரளிக்க விரைந்துவந்த காவல்துறை இருவரையும் கைதிசெய்து அழைத்துச் சென்றது.

Gold--jewellery--gold-ornaments
4 Shares
Share via
Copy link