அபுதாபியில் ATM மெஷினை உடைத்து திருட முயன்ற இருவர் கைது.!

ATM Damaged

அபுதாபியின் கயாத்தி தொழில்துறை பகுதியில், ஏடிஎம் மெஷினை சேதப்படுத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

முகம் மற்றும் கைகளை மூடிய இரண்டு ஆண்கள் ஏடிஎம் மெஷினை உடைக்க முயற்சிக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்ததை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அங்கு ஒரு சுத்தி மற்றும் அலுமினியத் துண்டு ஆகியவை மீட்கப்பட்டன. ஆனால் அந்த நபர்கள் தப்பி சென்றுள்ளனர். பின்னர் காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் கண்டு அபுதாபியில் உள்ள முசபா பகுதியின் (Mussafah area) தங்குமிடத்திலிருந்து கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் “பணத்தை திருடுவதற்காக தான் ஏடிஎம் மெஷினை உடைத்தோம்” என தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.

Loading...