துபாயில் பள்ளிப் பேருந்தைத் திருடி விற்ற இருவருக்கு துபாய் குற்றவியல் நீதிமன்றம் 1 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து, 184,000 திர்ஹம்ஸ் அபராதம் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
துபாய் பள்ளி பேருந்து நீண்ட நேரம் கண்காணிக்கப்படாமல் இருந்தது. பின்னர் பேருந்தின் உரிமையாளர் புகார் அளித்ததையடுத்து, போலிசார் விசாரணைக் குழுவை அமைத்தனர்.
இதனையடுத்து ஜிபிஎஸ் டிராக் உதவியுடன் ஷார்ஜாவில் உள்ள கார் ஷோரூமில் வாகனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த திருட்டு சம்பவத்தில் குற்றச்டாட்டப்பவர்களின் ஒருவர் அந்த கார் ஷோ ரூமில் வேலைப் பார்த்தவர் ஆகும்.
இதுகுறித்து விசாரணை நடத்திய போலிசார், அந்த கார் ஷோ ரூமில் வேலை பார்த்தவரின் நண்பர்கள் குழு ஒன்றை அமைத்து திட்டமிட்டு ஓள்ளி வாகனத்தை திருடியுள்ளதாக தெரீவ்த்தனர். பள்ளி வாகனத்திற்கான பதிவை செய்த அரசு ஆவணங்களை போலியாக தயாரித்து விற்பனை செய்துள்ளனர்.
திருடிய பள்ளி பேருந்தை ஷார்ஜாவில் உள்ள ஷோ ரூமில் 3 ஆயிரம் திர்ஹம்ஸுக்கு விற்பனை செய்துள்ளனர்.