UAE Tamil Web

வீடியோ: துபாயில் அந்தரத்தில் பறந்துவந்த இரண்டு நபர்கள் – நீங்க பார்த்தீங்களா..?

flying man n

துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாகக் குழுவின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில் இரு விண்கல வீரர்கள் ஜெட்மேன் சூட் அணிந்து துபாய் நகரையே வானில் வட்டமடிக்கிறார்கள். இறுதியாக கட்டிடத்தின் மேல் தளத்தில் நின்றுகொண்டிருந்த துபாய் இளவரசருக்கு அந்த வீரர்கள் அந்தரத்தில் மிதந்தபடி சல்யூட் அடிக்கிறார்கள்.

ஷேக் ஹம்தான் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பதிவில்,” எதிர்காலத்திற்கான பாதை ஏற்கனவே அமைக்கப்பட்டுவிட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Fazza (@faz3)

மேலும், கடந்த 2020 ஆம் ஆண்டு இதுபோன்ற பறத்தல் பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தில் இறந்த வின்சென்ட் ரஃபெட் நினைவாக இந்த சாதனைகள் நிகழ்த்தப்பட்டதாக ஷேக் ஹம்தான் குறிப்பிட்டிருக்கிறார்.

flying man n
3 Shares
Share via
Copy link