UAE Tamil Web

ஜாலி.. ஜாலி.. அமீரகத்தில் அடுத்தடுத்து வரும் 7 நாட்கள் விடுமுறை..!

UAE Holidays

2021 ஆம் ஆண்டு உண்மையாகவே ஆசிர்வதிக்கப்பட்ட ஆண்டு தான். ஈத் அல் பித்ர் பண்டிகைக்கு 4 நாட்கள், ஈத் அல் அத்ஹாவிற்கு 6 நாட்கள், இஸ்லாமிய புத்தாண்டிற்கு 3 நாட்கள் என வருடம் விடுமுறையை வாரி வழங்கியது. ஆனால், வருடம் இன்னும் முடிவில்லை மக்களே..

இந்த வருடத்தில் மேலும் 7 நாட்கள் விடுமுறை வரவிருக்கிறது. உண்மைதான். அடுத்து முகமது நபி (ஸல்) பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 21 (வியாழன்) – 23 (சனிக்கிழமை) வரை என 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போலவே, டிசம்பர் 1 அன்று அமீரக தியாகிகள் தினம் முதல் தேசிய தினம் என டிசம்பர் 4 வரையில் மொத்தம் நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

எப்படியோ.. விடுமுறை கிடைத்தால் ஜாலிதான் என்கிறீர்களா..? சரி.. விடுமுறைக்கு உங்களுடைய திட்டம் என்ன?

UAE Holidays
15 Shares
Share via
Copy link
Powered by Social Snap