UAE Tamil Web

துபாய் : இந்த இரண்டு சாலைகளும் 3 நாட்களுக்கு மூடப்படும் : RTA அறிவிப்பு..!

Dubai

துபாயில் சைக்கிள் சேம்பியன்ஷிப் நடைபெற்றுவருவதால் நாத் அல் ஷேபா, மெய்தான் சாலைகள் இன்று (வியாழக்கிழமை), நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய நாட்களில் இரவு 9 மணிமுதல் அடுத்தநாள் அதிகாலை 1 மணி வரையிலும் மூடப்படும் என துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து RTA வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில்,” 2021 ஆம் ஆண்டிற்கான நாத் அல் ஷேபா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற இருப்பதால் ஏப்ரல் 22, 23, 24 ஆகிய தேதிகளில் நாத் அல் ஷேபா, மெய்தான் சாலைகள் இரவு 9 மணிமுதல் அடுத்தநாள் அதிகாலை 1 மணி வரையிலும் மூடப்படும். மக்கள் மாற்றுப் பாதைகளான அல் கைல் சாலை, துபாய் அல் – அய்ன் சாலைகளைப் பயன்படுத்தவும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Dubai
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap