துபாய் டியூட்டி ஃப்ரீயின் இன்றைய குலுக்களில் ஷார்ஜாவைச் சேர்ந்த இந்திய சிறுவனான ஷான் யோகேஷ் கோலா -க்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாகக் கிடைத்திருக்கிறது. விடுமுறை காரணமாக மும்பை சென்றிருந்த கோலாவின் தந்தை தனது மகனின் பெயரில் டிக்கெட் வாங்குவது வழக்கம்.
அப்படி கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி மில்லினியம் மில்லியனர் சீரிஸ் 371 ல் 2033 என்ற எண் கொண்ட டிக்கெட்டை வாங்கியிருக்கிறார் கோலாவின் தந்தை. அதுதான் இப்பொது கோலாவை அதிர்ஷ்ட தேவதையாக்கியிருக்கிறது. கோலாவின் தாய் துபாயில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தெரபிஸ்ட்டாக பணிபுரிந்துவருகிறார்.
இதன்மூலம் மில்லினியம் மில்லியனர் டிராவில் 1 மில்லியன் அமெரிக்க டாலர்களைப் பெறும் 184 வது இந்தியர் என்ற பெருமையை கோலா பெறுகிறான். கடந்த 1999 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த மில்லினியம் மில்லியனர் டிராவில் இந்தியர்கள் அதிகளவில் பங்கேற்றுவருவது குறிப்பிடத்தக்கது.